குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள்!

Share this News:

லக்னோ (25 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மகளும் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தார்.

லக்னோ கடிகார கோபுரம் அருகில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் அகிலேஷ் யாதவின் மகள் டினா கலந்து கொண்டார். அவர் அவரது நண்பர்களுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஊடகங்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் திட்டமிட்டு மறைக்கப்படும் நிலையில் அகிலேஷ் யாதவின் மகள் குறித்தும் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் அவரது தோழிகள் சமூக வலைதளங்களில் அவர் போராட்ட களத்தில் கலந்து கொண்டதை பகிர்ந்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply