டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு – மேலும் விவசாயி தற்கொலை

Share this News:

புதுடெல்லி (10 ஜன 2021): மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்குவில் மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாபின் ஃபதேகான் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மஷ்ராய் கிராமத்தைச் சேர்ந்த அமரிந்தர் சிங் (40) என்ற விவசாயில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் இதன் மூலம், விவசாய போராட்டத்தின் மூலம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது.

போராட்டம் நடந்து கொண்டிருந்த பிரதான கூடாரத்தின் பின்புறத்தில் விவசாயி அமரிந்தர் சிங் விஷம் குடித்தார். அவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவர் மருத்துவமனையில்சிகிச்சை பலனின்றி இறந்தார்.

. இதற்கிடையில், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து முடிவு செய்ய விவசாயிகள் அமைப்புகளின் முக்கியமான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிங்கில் நடைபெறும் என்றும் இதில் அணைத்து விவசாய அமைப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேலைநிறுத்தக் குழு தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply