புதுடெல்லி (02 பிப் 2020): டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகம் அருகே மீண்டும் பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ஜாமியா பல்கலை அருகே மூன்றாவது முறையாக துபாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளது.
ஸ்கூட்டியில் வந்த பயங்கரவாதிகள் மாணவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்பு அவர்கள் தப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே டெல்லி ஜாமியா பல்கலையில், ராம் பகத் கோபால் என்ற பயங்கரவாதி ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது சுட்டதில் காஷ்மீர் மாணவர் சதாம் பாருக் என்பவர் காயம் அடைந்தார்.
அதனை தொடர்ந்து ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மீது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் மூன்றாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்படுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
.