பீஜிங் (03 பிப் 2020): சீனாவில் பயிலும் பாகிஸ்தான் மாணவர்கள் மீட்கப் படாமல் இருப்பதற்கு பாகிஸ்தான் மாணவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலானோர் மீட்கப் பட்டு வரும் நிலையில், வுஹான் நகரில் பயின்று வரும் பாகிஸ்தானை சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவர்கள் தங்களையும் மீட்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே சீனாவிலிர்நுது 324 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் (சனிக்கிழமை) மத்திய அரசு மீட்டு வந்தது. மேலும் 323 பேர் ஞாயிறன்று மீட்கப்பட்டு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
இதனைக் கண்டு ஆவேசமும் அழுகையுமாக, பாகிஸ்தான் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்., மேலும் அவர்கள், இந்தியாவை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.