பெங்களூரு (30 மார்ச் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என பஜ்ரங்தளம் இந்துக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூருவில் நடந்த நீலமங்கல உகாதி கண்காட்சியில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் இந்து விற்பனையாளர்களைச் சந்தித்து முஸ்லிம் வியாபாரிகளிடம் இறைச்சி வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
மேலும் கன்னடத்தில் அச்சிடப்பட்ட அறிவிப்பை பலருக்கும் பஜ்ரங்தள அமைப்பினர் விநியோகித்து வந்தனர்.
ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் இஸ்லாமிய வெறுப்பு தலைவிரித்தாடுகிறது. அங்கு முஸ்லிம்கள் கோவில் திருவிழாக்களில் வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்தில் இந்து ஜன ஜாக்ருதியின் உறுப்பினர் மோகன் கவுடா, நாட்டில் உள்ள அனைத்து ஹலால் பொருட்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.