ஜம்மு (25 ஜன 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லாவின் தாடியுடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கிரத்து செய்தது மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவருமான ஓமர் அப்துல்லா ஒருவர். ஸ்ரீ நகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள. அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் நீண்ட தாடியுன் தலையில் குல்லா அணிந்தவாறு காணப்படுகிறார்.
இந்நிலையி அவரது தாடியை எடுக்க அவரது குடும்பத்தினர் வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது