மீரட் (05 பிப் 2020): மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் கணவன் செய்த காரியம் உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் நகரைச் சேர்ந்த ஆரிப் என்பவருக்கும், ரோஷ்னி என்ற பெண்ணிற்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆரிப்பை விட ரோஷ்ணி மிகவும் அழகாக இருப்பார்.
மனைவி தன்னை விட அழகாக இருந்ததால் ஆரிபிற்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் சந்தேக தீயாக மாறி, தன் மனைவியின் அழகை அழிப்பதற்கு ஆரிப் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து தனது மனைவியின் முடியை வெட்டியதோடு பல சித்ரவதைகளையும் செய்துள்ளார் ஆரிஃப். நீண்ட நாட்களாக இந்த கொடுமையில் தவித்து வந்த ரோஷ்னி, தனது கணவன் வேலைக்கு சென்றதையடுத்து அந்த வீட்டில் இருந்து தப்பி வந்துள்ளார்.
பின்னர், காவல்நிலையத்தில் புகாரும் அவர் அளித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, ஆரிப்பிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.