கொல்கத்தா (18 மார்ச் 2020): கொரோனா வராது எனக்கூறி, சீருடையில் இருந்த பாதுகாவலருக்கு மாட்டு சிறுநீர் கொடுத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு கொல்கத்தா பாஜக நிர்வாகியான நாராயணன் சாட்டர்ஜி என்பவர், மாட்டு மூத்திரம் கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அதில் கொரோனா வராது என்று கூறி அனைவருக்கும் மாட்டு சிறுநீர் கொடுத்துள்ளார்.
மேலும் சீருடையில் இருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் மாட்டு மூத்திரம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி நாராயணன் சாட்டர்ஜி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாட்டு மூத்திரம் எதுவும் எந்த வியாதிக்கும் நிவாரணமாகாது என்பதும் மாறாக வேறு ஏதாவது நோயை அது தரலாம் எனபதும் குறிப்பிடத்தக்கது.