புதுடெல்லி (18 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இந்தியாவில் 148 ஆக உயர்ந்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் உலகமெங்கும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இன்றைய கணக்கின்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பரவாமல் தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளிகள், கல்லுரிகள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளன.
இதற்கிடையே சர்வதேச தலைவர்களுடனும் பிரதமர் மோடி இவ்விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.