திருவனந்தபுரம் (20 பிப் 2021): பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் ஏழு பேர் மேடையில் அமர்ந்திருக்க ஒரேஒருவர் மட்டும் பாரவையாளராக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பாஜக எம்பி சசிதரூர் #BJPThePartyIsOver என்ற ஹேஷ்டேக்குடன் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.
படம் எங்கே, எப்போது படமாக்கப்பட்டது என்று சஷி தரூர் சொல்லவில்லை. ட்வீட்டுக்கு கீழே சுவாரஸ்யமான கருத்துகளும் உள்ளன. கீழே அமர்ந்திருப்பவர் தலைவர். மேடையில் உள்ளவர்கள் உண்மையில் சாதாரண மக்கள். பாஜக மக்களை மேம்படுத்துகிறது. என்று கமெண்டுகள் குவிகின்றன.
ஆனால் இதனை மறுத்துள்ள பாஜாகவினர் சசி தரூர், போலியான செய்திகளைப் பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.