லக்னோ (26 ஜூன் 2021): உத்தரபிரதேசத்தில் இளம் பெணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் பாஜக தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்லியாவில் உள்ள பாஜக தலைவர் 23 வயதான பிரிஜ் மோகன் பாண்டே, 23 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனால் அந்த பெண்ணுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் தடை பட்டதாகவும் இதுகுறித்து போலீசில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக கட்வர் காவல் நிலைய போலீஸ் பொறுப்பாளர் ராஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.