லக்னோ (22 அக் 2022): ரயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக தலைவர் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
ரயிலில் நான்கு பேர் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி படம் பிடித்துள்ளார். கடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது நான்கு பேர் தொழுகை செய்துகொண்டு இருந்ததாகவும் மற்ற பயணிகள் செல்ல இடையூறாக வழியை மறித்து தொழுகை செய்ததாகவும் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அக்டோபர் 20ம் தேதி நடந்தது. சத்தியாகிரக விரைவு ரயிலில் நடந்ததாக பாஜக தலைவர் கூறியுள்ளார்.
https://twitter.com/i/status/1583666113425965056
மேலும் உறங்கும் பெட்டியில் பயணித்த அவர்கள் தொழுகை நடத்தியதால் மற்ற பயணிகள் ரயிலுக்குள் செல்லவோ, வெளியேறவோ முடியாமல் சிரமப்பட்டனர். என்று தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. தீப்லால் இந்திய ரயில்வே அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.