தாஜ்மஹாலில் தொழுகை – வைரலாகும் வீடியோ – உண்மை தன்மையை ஆராய உத்தரவு!

ஆக்ரா(22 நவ 2022): : தாஜ்மஹால் வளாகத்திற்குள் உள்ளதாக கூறப்படும் தோட்டப் பகுதியில் ஒரு பெண் தன்னுடன் அமர்ந்து ஆண் ஒருவர் ‘தொழுகை’ செய்வதாகக் கூறப்படும் வைரலான வீடியோவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் குமார் படேல் கூறுகையில், “தாஜ்மஹால் வளாகம் என்று கூறப்படும் பகுதியில் ஒரு நபர் தொழுகை நடத்துவதைக் காணும் ஒரு வீடியோ வைரலாவதை…

மேலும்...

ரெயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது பாஜக தலைவர் புகார் – வீடியோ!

லக்னோ (22 அக் 2022): ரயிலில் தொழுகை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக தலைவர் ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ரயிலில் நான்கு பேர் தொழுகை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏ தீப்லால் பார்தி படம் பிடித்துள்ளார். கடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது நான்கு பேர் தொழுகை செய்துகொண்டு இருந்ததாகவும் மற்ற பயணிகள் செல்ல இடையூறாக வழியை…

மேலும்...

தொழுகைக்கு சென்றவர்கள் மீது கும்பல் தாக்குதல்!

குருகிராம் (13 அக் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள போரா கலான் பகுதியில் உள்ள மசூதிக்கு புதன்கிழமை மாலை தொழுகைக்கு வந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒரு கும்பல் மசூதியையும் சேதப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த சுபேதார் நாசர் முஹம்மது, போரா கலான் பகுதியில் நான்கு முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே வசித்து வருவதாக தெரிவித்தார். புதன்கிழமை அவர்கள் மசூதிக்கு தொழுகைக்காக வந்தபோது, ​​சிலர் மசூதிக்குள் புகுந்து தாக்கினர். இனி இங்கு தங்கக்கூடாது…

மேலும்...

பொது இடங்களில் தொழுகை நடத்துவதற்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

குருகிராம் (28 மார்ச் 2022): அரியானா மாநிலம் குருகிராமில் பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து சன்யுக்த் ஹிந்து சங்கர்ஷ் சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி முழுவதும் பொது இடங்களில் தொழுகை நடத்துவதை உடனடியாகத் தடை செய்யாவிட்டால், மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தை நடத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. அதன் தலைவர் மகாவீர் பரத்வாஜ் தலைமையிலான 5 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு,…

மேலும்...

சவூதியில் மக்கா , மதீனா தவிர, மற்ற மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவு!

ரியாத் (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவூதி அரேபியாவில் மசூதிகளில் தொழுகை நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டு உள்ளது. சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் மசூதிகளில் தொழுகை நடத்துவது நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது….

மேலும்...