பாஜக தலைவருக்கு கொரோனா வைரஸ் (கோவிட் 19) பாதிப்பு!

Share this News:

ஐதராபாத் (01 ஜூன் 2020): தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானாவின் மூத்த பாரதிய ஜனதா தலைவர் (பிஜேபி) தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி சில அறிகுறிகளுடன் கோவிட் -19 பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வந்ததை அடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைராதாபாத் முன்னாள் எம்.எல்.ஏ ஞாயிற்றுக்கிழமை கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது அவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

தெலுங்கானாவில் கொரோனா பாதித்த முதல் அரசியல் தலைவர் சிந்தலா ராமச்சந்திர ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News: