சென்னை (01 ஜூன் 2020): தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அனைத்து சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால் வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம் அனைத்து சமய தலைவர்களுடன் நாளை மறுநாள் மாலை 4.45 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை எப்போது திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நாளை ஆலோசனை நடத்துகிறார்.