கேள்விகளால் பாஜக தலைவரை பிழிந்தெடுத்த கன்னையா குமார் – வீடியோ!

Share this News:

புதுடெல்லி (11 ஜன 2020): ஜே.என்.யூ தாக்குதல் தொடர்பான விவாத மேடையில் பாஜக தலைவரை அலற விட்டுள்ளார் கன்னையா குமார்.

சமீபத்தில் இந்துத்வா அமைப்பினரால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கொடூரமாக தாக்கப் பட்டனர். இவ்விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இந்தியா டிவி நடத்திய விவாதம் ஒன்றில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சங்க தலைவரும் தற்போதைய சிபிஎம் தலைவருமான கன்னையா குமார் மற்றும் பாஜக தலைவர் அமிதாப் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, கன்னையா குமார் கோட்சேவை தேச துரோகி என உங்கள் வாயால் கூற முடியுமா என்றார். ஆனால் அதனை கூற பாஜக தலைவர் மறுத்து விட்டார்.

பாஜக தலைவரை மடக்கிய கன்னையா குமாரை பார்வையாளர்கள் கைகொட்டி பாராட்டினர்.

வீடியோ


Share this News:

Leave a Reply