குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவிப்பு!

Share this News:

புதுடெல்லி (11 ஜன 2020): தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், ஜனவரி 10ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இஸ்லாமிய சமூகத்தினர் பெரும்பான்மை வகிக்கும் நாடுகளில் இருந்து சிறுபான்மையினராக இருக்கும் இந்து, சீக்கிய மதம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்து இந்தியாவில் குடியேற அனுமதி அளிக்கிறது. இச்சட்டம் மத அடிப்படையிலானது என்பதால் இச்சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply