மும்பை (10 பிப் 2021): மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்த ஏழு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சிவசேனாவின் இணைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா பாஜகவுக்கு சிவசேனா சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கொங்கன் பிராந்தியத்தில் உள்ள வைபவ் வாடி மாநகராட்சியின் ஏழு கவுன்சிலர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவிற்கு வந்து சென்ற சில மணி நேரங்களிலேயே அவர்கள் பாஜகவை விட்டு விளக்கியுள்ளனர்.
பாஜகவை விட்டு விலகியவர்கள், ‘பாஜகவிலிருந்து மேலும் பல தலைவர்கள் விலகி சிவசேனாவின் இணைவார்கள் என்று தெரிவித்தனர்.