அடுத்த பிரதமர் யார்? – அமித்ஷா பதில்!

புதுடெல்லி (18 ஜன 2023): பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலைமையும், நட்டாவின் அமைப்புத் திறமையும் பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று அமித் ஷா கூறினார். 2023ல் ஒன்பது மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையும், அடுத்த லோக்சபா தேர்தலையும் நட்டா தலைமையில் பா.ஜ., சந்திக்கும்.நட்டா தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக அமித்ஷா கூறினார். குஜராத்தில்…

மேலும்...

பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் – அமித்ஷா உறுதி!

புதுடெல்லி (15 நவ 2022): பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய ஊடகமான ‘நியூஸ்18’க்கு அளித்த பேட்டியில் அமித்ஷா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேலும் அதில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று எங்களது தேர்தல் அறிக்கை கூறுகிறது. எந்த மதச்சார்பற்ற நாட்டிலும், அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதுதான் எங்களின் வாக்குறுதி. அது நிஜமாக்கப்படும்” என்று அமித் ஷா தெளிவுபடுத்தினார்….

மேலும்...

திமுக அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக அதிரடி பிளான்!

சென்னை (14 மார்ச் 2021): சீட் கிடைக்காத திமுக பிரமுகர்களை பாஜக பக்கம் இழுக்க அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ இதுவே காரணமாக அமைந்தது. இதனை தமிழகத்திலும் நிறைவேற்ற பாஜக முயன்று வருகிறது. இதற்கு வலுவாக இருக்கும் திமுகவை குறி வைத்து அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார். திமுகவில் அறிவிக்கப்பட்ட…

மேலும்...

அமித்ஷாவின் அதிரடி திட்டம் – அப்செட்டில் எடப்பாடி!

சென்னை (02 மார்ச் 2021): அதிமுகவுடன் சசிகலா இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாகவும் இதனால் எடப்பாடி அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் களமிறங்கிய எடப்பாடி, பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கி பாமகவின் கூட்டணியை உறுதிசெய்துள்ளார். அதுபோலவே, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. பாஜகவுக்கு 22 அல்லது…

மேலும்...

பாஜகவுக்கு அடிமேல் அடி – முக்கிய தலைவர்கள் ராஜினாமா!

மும்பை (10 பிப் 2021): மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்த ஏழு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சிவசேனாவின் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா பாஜகவுக்கு சிவசேனா சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கொங்கன் பிராந்தியத்தில் உள்ள வைபவ் வாடி மாநகராட்சியின் ஏழு கவுன்சிலர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவிற்கு வந்து சென்ற சில மணி நேரங்களிலேயே அவர்கள் பாஜகவை…

மேலும்...

அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு!

புதுடெல்லி (29 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெரும் வரை போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். டெல்லியில் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டிசம்பர் 3 ம் தேதி விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்பு தெரிவித்திருந்தார். புராடியில் உள்ள சமரவேதிக்கு போராட்ட இடத்தை மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால்…

மேலும்...

அமித்ஷாவின் புகைப்படம் நீக்கம் ஏன்? – ட்விட்டர் விளக்கம்!

புதுடெல்லி (13 நவ 2020): மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவர புகைப்படத்தை ட்விட்டர் திடீரென நீக்கியது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமித் ஷாவின் ட்விட்டர் கணக்கில் சுயவிவர படம் நேற்று திடீரென ட்விட்டரால் அகற்றப்பட்டது. ட்விட்டரின் நடவடிக்கை பதிப்புரிமை மீறலை அடிப்படையாகக் கொண்டது. என்பதாக ட்விட்டர் அப்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில் ‘கவனக்குறைவான பிழை காரணமாக, எங்கள் உலகளாவிய பதிப்புரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக அமித் ஷாவின் ட்விட்டர்…

மேலும்...

அமித்ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம்!

சென்னை (27 அக் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்.பி., அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு: மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் வணக்கம். பொருள்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவிற்கு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள்…

மேலும்...

எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா மீண்டும் அனுமதி!

புதுடெல்லி(13 செப் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அமித்ஷா, கொரோனா நெகட்டிவ் ஆன நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமித்ஷா மேலும் சில நாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்...

கொரோனா வைரஸ் – அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (18 ஆக 2020): கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து குர்கானில் உள்ள மேதாந்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரு வார சிகிச்சைக்குப் பிறகு அவரது பரிசோதனை முடிவில், வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் அமித் ஷாவுக்கு மீண்டும்…

மேலும்...