கொரோனா வைரஸ் லாக்டவுன்: நூற்றுக் கணக்கானோருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக தலைவர்!

Share this News:

பெங்களூரு (11 ஏப் 2020): உலகமே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்க எதைப் பற்றியும கவலைப்படாமல் தனது பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டடியுள்ளார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஜெயராம். தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் மத பிரார்த்தனைக் கூட்டங்களைக்கூட அனைத்து மதத்தினரும் கைவிட்டுள்ளனர்.

ஆனால் இதுகுறித்து கடுகளவும் கவலைப்படாத பாஜக எம்.எல்.ஏ ஜெயராம், நூற்றுக் கணக்காணோர் கூடியிருக்க, உறச்சாகத்துடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். மேலும் பலருக்கு ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் உணவும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒப்புக் கொண்டுள்ள காவல்துறை சமூக விலகல் கடைபபிடிக்காதது உண்மைதான் எனத் தெரிவித்துள்ளது.

இச்செய்தி தெரிய வந்தவுடன் ‘லாக்டவுன் உத்தரவுகளும், லத்தி அடியும் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? பாஜகவுக்கு இல்லையா?’ என்று பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Share this News:

Leave a Reply