தஞ்சாவூர் (11 ஏப் 2020): தமிழகத்தின் இரண்டாவது பெரிய மருத்துவக் கல்லூரியான தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனைக் கூடம் இல்லாதது துரதிர்ஷ்டம் என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.
கொரோனா வைரஸ் உலக அளவிலும், இந்தியாவிலும் பெரிய அளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் கொரோனா ஆய்வுக்கூடம் இல்லாமல் அப்பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ய அவர்களின் ரத்தம் மற்றும் உமிழ் நீர் மாதிரிகள் 108 ஆம்புலன்ஸில் திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
“தஞ்சாவூருக்கு வர இருந்த கொரோனா பரிசோதனை ஆய்வுக் கூடத்தை, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி திருவாரூருக்கு கொண்டு சென்றுவிட்டார் அமைச்சர் ஆர்.காமராஜ்’’ என்று மருத்துவ வட்டாரத்தில் குற்றம் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.