விராட் கோலி அனுஷ்கா ஷர்மா விவாகரத்து – பாஜக எம்.எல்.ஏ பகீர் கருத்து -வீடியோ!

Share this News:

லக்னோ (29 மே 2020): இந்திய (பிசிசிஐ) கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடிகை அனுஷ்கா ஷர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்று உத்திர பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நந்த் கிஷோர் குர்ஜார் வலியுறுத்தியுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் அவர் நடித்துள்ள ‘பாட்டல் லோக்’ என்ற வெப் சீரிஸ் இந்திய வகுப்பு வாத ஒற்றுமைக்கு எதிராக உள்ளதாக நந்த் கிஷோர் குர்ஜார் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில் குர்ஜார், “விராட் கோலி ஒரு தேசபக்தர், அவர் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அவர் அனுஷ்காவை விவாகரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இது தவிர குர்ஜார், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்தேகருக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அனுஷ்கா சர்மாவுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘பாட்டல் லோக்’ ஏற்கனவே நேபாள கோர்கா சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக சட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News: