பெங்களூரு (28 மார்ச் 2022): முஸ்லிம் நாடுகள் திருப்பி அனுப்பத் தொடங்கினால், என்ஆர்ஐகளுக்கு வேலை வழங்க முடியுமா என்று பாஜக மூத்த தலைவரும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் சில கோயில் வளாகங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடைகள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு விஸ்வநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை, மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு பரவி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் தலைநகர் பெங்களூருவில் தோன்றிய இந்த போக்கு ஹாசன், துமகுரு, சிக்மகளூர் மற்றும் ஷிவ்மோகா மாவட்டங்களிலும் பரவியுள்ளது.
இந்நிலையில் மாநில வளர்ச்சி குறித்து பதிலளித்த எம்.எல்.சி, விஸ்வநாத் முஸ்லிம் நாடுகள் என்.ஆர்.ஏக்களை திருப்பி அனுப்பத் தொடங்கினால், அவர்களுக்கு வேலை வழங்க முடியுமா? என்று மாநில அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.