குடியுரிமை சட்டம் குறித்து இந்து ராம் பரபரப்பு தகவல்!

Share this News:

மும்பை (03 பிப் 2020): ‘குடியுரிமை சட்டம் பாஜகவின் இந்து ராஷ்டிராவின் ஒரு பகுதியே’ என்று இந்து ராம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ‘மும்பை கலெக்டிவ்’ என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய என்.ராம், ” நாட்டின் பொருளாதார நிலையை மக்கள் மறக்கடிப்பதற்காக சரியான நேரத்தில் குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து மக்களை திசை திருப்பியுள்ளது மத்திய அரசு. அதேவேளை பாஜகவின் இந்து ராஷ்டிராவின் ஒரு பகுதியன சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை தந்திரமாக புகுத்தியுள்ளது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே இவை தெளிவாக கூறப்பட்டிருந்தன. குடியுரிமை சட்டத்தில் ஏற்கனவே பாஜகவின் பட்டியலில் கிறிஸ்தவர்கள் இல்லை. பின்னர்தான் அவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் தேசிய குடிமக்களின் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் சுதந்திர இந்தியாவில் நாட்டுக்காக போராடியவர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளதுதான் அதிர்ச்சி தரும் தகவல். ஒரு போதும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது. அதேவேளை கட்டுப்பாட்டுடன் போராட்டம் நடைபெறுவதையும் உறுதிபடுத்த வேண்டும்” என்றார்.


Share this News:

Leave a Reply