காந்திநகர் (05 டிச 2022): குஜராத்தில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பாஜகவினர் எஸ் எம் எஸ் மூலம் பூத் சிலிப் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இணைப்புகளுடன் பாரதீய ஜனதா கட்சி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
எஸ் எம் எஸ் பெற்ற வாக்காளர்களின் மொபைல் எண்களை பாஜக எவ்வாறு பெற்றது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்த விவரங்களை சமூக ஆர்வலர் ஒருவர் ட்விட்டரில் பகிந்துள்ளார்.
💣💣 #GujaratElection2022 #VoterID mobile linking. #Data Leak.
As #Gujarat goes for phase 2 polls today, voters of several constituencies were sent SMS with links to booth slips by #BJP and the entire data is public. 🧵
We salute cooperation of ECI and TRAI in this matter
— Srikanth.CashlessConsumer | ஸ்ரீகாந்த் (@logic) December 5, 2022