ஐதராபாத் (05 டிச 2022): தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி ஒரு வயது சிறுவன் உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் நெகொண்டா மண்டலத்தைச் சேர்ந்த படாவத் மாலு கவிதா மகன் மணிகண்டா (1) என்ற குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விளையாடுவதற்காக பெற்றோர் பூஜைக்காக வைத்திருந்த தேங்காய் துண்டை கொடுத்துள்ளனர்.
குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது தேங்காய் துண்டை திண்றுள்ளது. அப்போது தேங்காய் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியுள்ளது. குழந்தை அலறல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.