இந்தூர் (07 ஜன 2023): ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
ஐம்பத்தைந்து வயதான பிரதீப் ரகுவன்ஷி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ஜிம்மிற்கு வந்த பிரசாத், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளில், பிரசாத் திடீரென சரிந்து விழுந்தது பதிவாகியுள்ளது. அவர் பிரசாத் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரசாத் இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் வேறு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றும், உடல் நலனில் அக்கறை கொண்டவர் என்றும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவரது இதய மருத்துவர் அவருக்கு பளு தூக்கும் போது குறைவான எடையை தூக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எடையை தூக்கவோ, அதிகமாக உடற்பயிற்சி செய்யவோ, மூச்சை அடக்கவோ கூடாது என்று இருதய மருத்துவ நிபுணர் டாக்டர் அனில் கூறியுள்ளார்.