பிரபல தொழிலதிபர் தற்கொலை – தற்கொலைக் கடிதத்தில் பாஜக எம்எல்ஏ பெயர்!

Share this News:

பெங்களூரு (02 ஜன 2023): பெங்களூருவில் தொழிலதிபர் பிரதீப் எஸ் (47) சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தற்கொலைக்கு அவர்களே தூண்டியதாகவும், தற்கொலைக் கடிதத்தில் கூறியிருபதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் பிரதீப் தனது காரில் தன்னைத்தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எட்டு பக்க தற்கொலைக் கடிதத்தில் சிலரது பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர். அதில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலியின் பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரதீப்பின் தற்கொலைக் குறிப்பில் லிம்பாவலி தவிர கோபி கே, சோமையா, ஜி ரமேஷ் ரெட்டி, ஜெயராம் ரெட்டி, ராகவ பட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply