குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

Share this News:

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை பரிசீலிக்கும்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாதுதீன் ஒவைசி, ஜெய்ராம் ரமேஷ், ரமேஷ் சென்னிதலா, மஹுவா மொய்த்ரா, முஸ்லிம் லீக், சிபிஐ அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, திராவிட முன்னேற்றக் கழகம், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட 143 தனிநபர்கள் மற்றும் பல அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பட்டியலிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம். டிசம்பர் 2019 தொடர்பான ரிட் மனுக்கள் தொடர்பாக, தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் ஏற்கனவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த சட்டத்திற்கு தடை கோரிய மனுதாரர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த சட்டம் அரசியலமைப்பின் 14 வது பிரிவை மீறுகிறது என்று மனுதாரர்கள் வாதமாக உள்ளது,

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் மனு பட்டியலில் இடம்பெறவில்லை.


Share this News:

Leave a Reply