ஜெயலலிதா இறந்த நாள் நல்ல நாளா? எடப்பாடியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share this News:

சென்னை (06 டிச 2022): ஜெயலலிதா இறந்த நாளான நேற்று அவரது நினைவு நாள் அனுசரிக்கப் பட்டது.

இந்நிலையில் அதிமுக சார்பில் ஒபிஎஸ், இபிஎஸ் தனித்தனீஆக ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் எடப்பாடி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி உறுதி மொழியை வாசிக்கும்போது, ‘அம்மா இறந்த நன்னாளில்’ என்று வாசித்தார். இதனை அதிமுகவினரும் சேர்ந்து வாசித்தனர்.

அதிமுகவினரின் அபிமானத்திற்குரிய அம்மாவின் இறந்த நாள் எப்படி நன்னாளாக இருக்க முடியும்? என்று எடப்பாடி பழனிச்சாமியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply