டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு!

Share this News:

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தாஹிர் உசேன் என்பவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லி கலவரத்தில் அடித்துக்கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் உடல் ஜாப்ராபாத் பகுதியில் அங்கித் சர்மாவின் வீட்டின் அருகே உள்ள ஒரு கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரியான அவரது தந்தை ரவீந்தர் சர்மா, ஆம் ஆத்மி பிரமுகர் தாஹீர் உசேனின் ஆதரவாளர்களே தனது மகனைக் கொன்றதாகக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து தாஹிர் உசேன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வன்முறையில் தாஹிர் உசேனின் வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்ய இயலாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply