புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவசங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ABVB துணையுடன் இந்த பயங்கரம் நடத்தப்பட்டு உள்ளது. விடுதிக்குள் இருந்த மாணவிகள் கெஞ்சியும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் ABVB ஐச் சார்ந்த பெண் பயங்கரவாதிகளும் இருந்தனர்.
இச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜே.என்.யூ., மாணவசங்க தலைவி உள்பட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பல்கலை., வளாகத்தில் இந்த வன்முறை நடப்பதற்கு முன்னதாகவே இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை விட்டு விட்டு அடி வாங்கியவர்கள் மீதே வழக்கு பதியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.