கோவின் இணையதளத்தில் ரகசியங்கள் கசிவு – ஒன்றிய அரசு மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (21 ஜன 2022): கோவிட் தடுப்பூசியை முன்பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட கோவின் செயலியில் இருந்து தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்திகளை ஒன்றிய அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “கோவின் செயலியில் தகவல் கசிவு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்; ஆனால் கசிவுக்கும் செயலிக்கும் தொடர்பில்லை என்பது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

கோவின் செயலியில் உள்ள தகவல்கள் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என்றும் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply