நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை – காங்கிரசுக்கு கடும் பின்னடைவு!

Share this News:

புதுடெல்லி (10 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 03 இடங்களிலும், காங்கிரஸ் 03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 89 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 01 இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

உத்தரகாண்ட், மணிப்பூரில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், கோவாவில் மட்டும் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்தாலும் தற்பொழுது 18 இடங்களில் அங்கு பாஜக முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 12 இடங்களில் முன்னணியில் உள்ளது. ஐந்து மாநிலத்தில் மொத்தமாக உள்ள 690 தொகுதிகளில் 68 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *