புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவில் இன்று ஒரேநாளில் கரோனாவால் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 341 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்புஏற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில்