சென்னை (22 மார்ச் 2020): தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 341 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.