கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 85,940 ஆக அதிகரித்துள்ளது. இது சீனாவை விட அதிகமாகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 85 ஆயிரத்து 940 -ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 753-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 ஆயிரத்து 258 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 29 ஆயிரத்து 100 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்து 68 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா தொற்று ஏற்பட்ட சீனாவில் 82,929 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியுள்ளது.