புதுடெல்லி (12 மார்ச் 2021): இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் பெருகி வருகிறது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,08,846 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,58,306 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 15,157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,53,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,97,237 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க தடுப்பூசியும் இதுவரை 2,61,64,920 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.