புதுடெல்லி (23 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது மதிக்கத்தக்கவர் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை இந்தியாவில் 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.