நியூயார்க் (23 மார்ச் 2020): உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலிக்கு அடுத்தபடியாக அமெரிக்கா அதிக நோயாளிகளைக் கொண்ட நாடாக முன்னேறியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்களில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்பில் ஸ்பெயினைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அமெரிக்காவும், ஈரானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஜெர்மனியும் முன்னிலை வகிக்கின்றன.
இதற்கிடையே உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,016 ஆக உள்ளது.
திங்கள்கிழமை மதியம் நிலவரப்படி உலகளவில் கரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 3.39 லட்சம். இவர்களில் 99,013 பேர் குணமடைந்துவிட்டனர். 14,704 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, வைரஸ் தாக்கி 2,26,008 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இத்தாலியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 59,138 ஆகவும், உயிரிழப்பு 5,476 ஆகவும் உள்ளது. இது சீனாவைக் காட்டிலும் அதிகமாகும்.