புதுடெல்லி (24 மார்ச் 2020): நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவி வருவதையடுத்து, 4,000க்கும் மேற்பட்ட முகமூடிகளை மக்களுக்கு வழங்க இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்ட இர்பான், “சமூகத்துக்காகச் சிறிய விஷயம் செய்கிறோம். உங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து, சுகாதாரத்துக்குத் தேவைப்படும் விதமாக மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்,” என்று பதிவிட்டார்.
மேலும் “இது ஒரு சிறிய தொடக்கமாகும், நாங்கள் இன்னும் உதவி செய்வோம். நம் எல்லோரும் செய்ய வேண்டும்…” என்றும் பதிவிட்டுள்ளார்.
இவை தங்கள் தந்தையால் நடத்தப்படும் மெஹ்மூத் கான் பதான் சமூக நல மன்றத்தின் பெயரில் வழங்குவதாகவும் , மேலும் அவை வதோதரா சுகாதாரத் துறைக்கு விநியோகிக்கப்படும், அவை தேவைப்படுபவர்களுக்கு வழங்கும். என்றும் பதான் பிரதர்ஸ் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுமட்டுமல்லாமல் மேலும் பல சேவைகளை செய்யவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.