யூனான் (24 மார்ச் 2020): உலகையே கொரோனா மிரட்டிக் கொண்டிருக்க சீனாவில் ஹான்டா வைரஸுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் தற்போது உலகின் 160க்கும் மேலான நாடுகளில் பரவி உள்ள மக்களை அசாத்தியமாக புரட்டி போட்டு வருகிறது. இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில் வைரஸிலிருந்து மக்களை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் புதிதாக ஹன்டா வைரஸ் (HantaVirus) எனும் நோய் ஒன்று உருவாகியுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒருவர் திடீரென உயிரிழக்க, அவரது மரணத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆராய பிரேத பரிசோதனை செய்ததில், அந்த நபர் ஹன்டா வைரஸூக்கு ஆளாகியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹன்டா வைரஸானது, எலிகளின் கழிவுகள் மூலம் உருவாகக் கூடியது. உபயோகத்தில் இல்லாத வீட்டில் அல்லது அறைகளில் உள்ள பொருட்களில் எலிகள் எச்சம் வைப்பதும், மலம் கழிப்பதும் வழக்கமாக இருக்கும். வெகுநாட்களாக அந்த கழிவுகள் அகற்றப்படாமலோ கண்டறியப்படாமல் இருந்தால் நாளடைவில் அவைகள் தூசாக மாறும்.அந்த தூசித் துளிகளை சுவாசிக்கும் போது இந்த ஹன்டா வைரஸ் நோய் உண்டாகும். இந்த வகையான வைரஸ் கொரோனாவை போன்று ஒருத்தரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. ஆனால், இந்த ஹன்டா வைரஸ் சரிவர சிகிச்சை அளிக்கப்படவில்லையேல் மரணம் நிகழலாம்.
ஹான்டா வைரசுக்கும் காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஆகியவை முதலில் இந்த ஹன்டா வைரஸால் ஏற்படும். தீவிரமடைந்த பிறகு வறட்டு இருமல், மூச்சுத் திணறல், போன்றவற்றையே அறிகுறிகளாக கூறப்படுகிறது.