ஐதராபாத் (27 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 20 வயது கர்ப்பிணிப் பெண் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
முன்னதாக, அந்த பெண் நிலூஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கொரோனா சிவப்பு மண்டல மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
காந்தி மருத்துவமனையில், டாக்டர் ரேணுகா, மூத்த மருத்துவர்கள் டாக்டர் அபூர்வா, டாக்டர் தீப்தி ரஹஸ்யா மற்றும் பிஜி மருத்துவர் டாக்டர் சந்தனா ஆகியோர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
அதில் அந்த பெண் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது அனைவரும் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள் இரண்டு தினங்களில் குழந்தைகளுக்கு கோவிட் 19 பரிசோதனை மேர்கொள்ளப்படும் என்றனர்.