இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (12 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரசால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் வெளிநாட்டினர் 17 பேர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாகக் கேரளாவில் 17 பேர், மராட்டியம் 11 பேர், உத்தரப்பிரதேசத்தில் 10 பேர், டெல்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply