கோவை ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

Share this News:

கோவை (12 மார்ச் 2020): கோவை ஷஹீன்பாக் போராட்டம் 5 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் ஸ்டைலில் நாடெங்கும் பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கோவை ஆத்துப்பாலம் இஸ்லாம் ஷாஃபி ஜமாத் மசூதி மைதானத்திலும் ஷஹீன்பாக் ஸ்டைலில் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதி அருகே சில மர்ம நபர்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கோவை காவல்துறை அனைத்து சமூக மக்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் அடிப்படையில் அமைதியை நிலைநாட்டவும், 5 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply