பிணராயி விஜயனின் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுக்குள் வந்த கொரொனா வைரஸ்!

Share this News:

திருவனந்தபுரம் (16 ஏப் 2020): கேரள முதல்வர் பிணராயி விஜயனின் அதிரடி நடவடிக்கைகளால் கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.

கேரளாவில்தான் இந்தியாவிலேயே முதலாவதாக கொரோனா தொற்று பரவியது. இந்நிலையில் அங்கு புதிதாகக் கொரோனா பாதிப்புக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலும், குணமடைந்து வீடு செல்பவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் உள்ளன.

இதன்மூலம் ‘இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய மாநிலம் கேரளம் தான்’ என முதல்வர் பினராயி விஜயன் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 56 சதவீதத்தினர் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்றுவிட்டதாகவும், பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து வருகிறோம். கண்காணிப்பில் இருப்பவர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்குகிறோம். அது நல்ல பலனை அளித்து வருகிறது” என்றார்.


Share this News:

Leave a Reply