சென்னை (16 ஏப் 2020): தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
அதாவது சென்னையில் 217 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 127 பேருக்கும் திண்டுக்கல்லில் 65 பேருக்கும் திருநெல்வேலியில் 58 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், திருச்சியில் 43 பேருக்கும், நாமக்கல் 50 மற்றும் ராணிப்பேட்டை 39, செங்கல்பட்டு 50, மதுரை 44, கரூர், தேனி மற்றும் திருவள்ளூரில் தலா 41 பேருக்கு, தூத்துக்குடியில் 26, விழுப்புரத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் திருப்பூரில் 80, கடலூர் 20, மற்றும் சேலத்தில் 24, திருவாரூரில் 17, விருதுநகர் 17, திருவண்ணாமலை 12, தஞ்சாவூர் 18, நாகப்பட்டினம் 38, திருப்பத்தூர் 17, கன்னியாகுமரியில் 16 மற்றும் காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும், சிவகங்கை 11மற்றும் வேலூரில் 19பேருக்கும், நீலகிரியில் 9பேருக்கும், தென்காசி 9, கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும் ராமநாதபுரத்தில் 10 பேருக்கும், அரியலூர் 2 மற்றும் பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை தினமும் வெளியாகும் தொற்று எண்ணிக்கையின்படி தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.