புதுடெல்லி (31 ஜன 2020): நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் ஒத்திவைத்து டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 06 மணிக்கு தூக்கிலிட உச்ச நீதிமன்றம் உத்தர்விடிருந்த நிலையில் தூக்கிலிடுவதை ஒத்திவைத்து இரண்டாவது முறையாக டெல்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூக்கு தண்டனையை ஒத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி கீழமை நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.