திருவண்ணாமலை (31 ஜன 2020): சீனாவிலிருந்து தமிழகம் வந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவா்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7, 711 ஆக உயா்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் சென்னை வந்து சேர்ந்தார். அதனைத்தொடர்ந்து தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை புண் நோயால் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், சீனாவிலிருந்து வந்திருப்பதாகக் கூறி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக் கூடும் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதயைடுத்து அவருக்கு தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கான மற்றொரு பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கான பரிசோதனையின் முடிவு வந்த பிறகே அவா் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து முடிவாகக் கூற முடியும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஏற்கனவே சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய கேரளத்தைச் சோ்ந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனி வாா்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது..