திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொண்டால் பலாத்காரமல்ல – நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

Share this News:

கட்டாக் (25 மே 2020): திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல என்று ஒடிசா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் இளம் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருகும் காதல் மலர்ந்துள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்பு அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனை அடுத்து அந்த இளைஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. எனினும் இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் இடையே நடந்தது பலாத்காரம் அல்ல என்றும், ‘ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக நடப்பது, சம்மதம் இன்றி நடப்பது, கொலை செய்வதாக மிரட்டி, அல்லது காயப்படுத்தி விடுவதாக மிரட்டி பெண்ணின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு உடலுறவு கொள்வது, அந்த நபரை பெண் தனது கணவர் என்று நினைத்து உறவு கொள்வது, மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது அல்லது மயக்க மருந்து கொடுத்து உறவு கொள்வது பலாத்காரமாகும்.’ என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக நினைத்து உறவு கொண்டுள்ளது பலாத்கார குற்றத்தின் கீழ் வராது. என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Share this News: